5 ஆண்டுகளாக பூட்டி வைத்திருக்கும் பொதுக் கழிப்பிடத்தை மீண்டும் திறக்க வேண்டும் – பாமக மனு.

கோவை, தொண்டாமுத்தூர் ஒன்றியம் ஆலந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட மகாசிமங்கலம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் அதிக அளவில் உள்ளனர். இந்த கிராமத்தில் ஏற்கனவே இருந்த பொதுக்கழிப்பிடம் 5 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில் கழிப்பிட வசதியின்றி முதியவர்கள் பெண்கள் குழந்தைகள் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மிகுந்த அச்சத்துடன் உயிருக்கு பயந்து இயற்கை உபாதைகளை கழிக்க சென்று வருவதாக கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சனைகளில்  தலையிட்டு  பொதுக் கழிப்பிட வசதிக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோவை மாவட்ட பாமக சார்பில் கோவை மாவட்டம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.