மின் கட்டண உயர்வு குறித்து கோவை தொழில்துறையினர் கருத்து.

வணிக தொழில் அமைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. புதிய மின் கட்டணத்தின்படி, வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால், மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்படும் சூழல் ஏற்பட்டது.

ஆனாலும், மின்வாரியத்திற்கு 1,65,000 கோடி ரூபாய் கடன் இருந்து வருகிறது. இதனை கட்டுக்குள் வைக்க வேண்டுமென்றால் அடுத்த ஐந்து ஆண்டிற்கு வருடத்திற்கு ஆறு சதவீதம் அல்லது ஐந்து ஆண்டுகளில் 30 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை வாரியம் அறிவுறுத்தி இருந்தது. அதற்கான ஒப்புதலையும் வழங்கியது.

இதன் படி வணி நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது கோவை முக்கிய தொழில் நகரமாக விளங்குவதால்

இது குறித்து கோவை டேக்ட் தலைவர் ஜேம்ஸ் இடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் வசிக்கக்கூடிய மக்களுக்கும் தொழில் துறையினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்துறைக்கு கடுமையான பாதிப்பு.

மின்சார வாரியம் கடன் சுமையில் இருப்பதாகவும் அதனை தீர்ப்பதற்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசும்
மின்வாரியமும் கூறுகிறது.

தொழில்துறையைச் சேர்ந்த எங்களால் தமிழக அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. சிறு குரு தொழில் முனைவோர்களுக்கு மின் கட்டணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

சோதனைக்கு மேல் சோதனை தொழிலில் அடிமேல் அடி விழுந்து கொண்டுள்ளது. கொரோனாவுக்கு பிறகு எழுச்சி இல்லை வீழ்ச்சியே தொழில் துறையில் சந்தித்துக் கொண்டுள்ளன.

நெருக்கடியில் இருந்து  தமிழக அரசு மீண்டு வர மேலும் கட்டணம் உயர்வு 8 சதவீதம் கூட லாபம் இல்லாமல் செயல்படக்கூடிய தொழிலில் மின்கட்டணம் உயர்வு பன்மடங்கு சுமைக்கு மேல் சுமையாக உள்ளது.

10 லட்சம் தொழில் முனைவோர் 90 லட்சம் தொழிலாளர்கள் இதனை நம்பி இருக்கின்றன என்று இவ்வாறு கூறினார்.

இது குறித்து கொடிசியா தலைவர் திருஞானத்திடம் கேட்டபோது:-

இந்த வருடம் கடந்த 4 மாதத்திற்கு முன்பு தான் மின் கட்டணத்தை உயர்த்தினார்கள் இப்பொழுது இல்லாமல் அடுத்த ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்தினால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்

இதேபோல கொசிமா தலைவர் நல்லதம்பி இடம் கேட்டபோது:-

அவர் கூறியதாவது:-

நாலே முக்கால் சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மின்கட்டணத்தை உயர்த்தி அதில் குறைக்கவில்லை. நிலை கட்டணத்தை கிலோ வாட் மின்சார கட்டணம் நிர்ணயிக்கிறார்கள். அதனால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. உடனே அதை நிறுத்த வேண்டும் என கூறினார்.

இவ்வாறு தங்களுடைய கருத்தை தொழில் துறையினர் தெரிவித்தனர்