என்.ஐ.ஆர்.எஃப். தர வரிசைப்பட்டியலில் 89 ஆவது இடத்தை பிடித்த எஸ்.என்.எஸ். ராஜலக்ஷ்மி கலை கல்லூரி

ஆண்டுதோறும் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், கல்வி, கல்லூரியின் செயல்பாடுகள், மாணவர் சேர்க்கை, ஆய்விதழ்கள் ஆகியவற்றை கணக்கிட்டு தேசிய தரவரிசைப்பட்டியல் நிறுவனமான என்.ஐ.ஆர்.எஃப் (NIRF) தர வரிசைப்பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அதில் கலை – அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களின் கிழ் செயல் படும் கல்லூரிகளில் ஒன்றான, டாக்டர் எஸ்.என்.எஸ். ராஜலக்ஷ்மி கலை அறிவியல் கல்லூரி 89 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

மேலும், என்.ஐ.ஆர்.எஃப். இன்னோவேஷன் தரவரிசைப்பட்டியலில் டாக்டர் எஸ்.என்.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், எஸ்.என்.எஸ். பொறியியல் கல்லூரியும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.