தேசிய மருத்துவக் காப்பீட்டின் உச்சி மாநாடு 2023!

மருத்துவக் காப்பீட்டை மறு வறையறை செய்து நிலையான சுகாதார அமைப்புகளை உருவாக்குவதற்கான கூட்டு அணுகுமுறை சனிக்கிழமை  மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேசிய மருத்துவக் காப்பீட்டின் உச்சி மாநாடு 2023 தேசிய காப்பீட்டு கவுன்சில் (GIC), மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள், இந்திய மருத்துவச் சங்கத்தின்; தமிழ்நாடு மாநிலக்கிளை, மாநில மருத்துவமனை குழு, மாநில காப்பீட்டு குழு, இந்திய மருத்துவச் சங்க கோவை கிளை ஆகியோர்களால் இணைந்து நடத்தப்பட்டது.

இந்த இரண்டு நாள் மாநாட்டில் மருத்துவர்கள், மருத்துவத்துறை சார்ந்தோர், மருத்துவக் காப்பீட்டுத்துறையில் பணிபுரிவோர்களுக்கு தங்களின் மருத்துவக் காப்பீட்டு அனுபவங்களை  வளர்த்துக்கொள்ளவும் பொதுமக்கள் தங்களுடைய மருத்துவத் தேவையின் போதும் அவசரத்தேவையின் போதும் மருத்துவக் காப்பீட்டினை அதிக அளவிலும் சரியான வழிகளிலும் பயன்படுத்துவதைக் கொண்டு சேர்க்க கருத்துரைகள் வழங்கப்பட்டன.

மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :

  1. ஒற்றை சாளர முறைபடி வெளிப்படையாக தகுதிவாய்ந்த மருத்துவமனைகளை, மருத்துவகாப்பீட்டு நிறுவனங்களில் அதிகமாக பதிவு செய்ய வேண்டும். இதனால் பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சை பெற வழிவகை செய்ய முடியும்.
  2. அறிவியல் முறைப்படி மருத்துவச் சேவைகளின் கட்டணங்களை வறையறுக்க வேண்டும். இதன் மூலம் உயர்தரமான மருத்துவச் சேவைகளை மக்களிடையே கொண்டு சேர்க்க முடியும்.
  3. மருத்துவமனைகளும், காப்பீட்டு நிறுவனங்களும் இணைந்து செயலாற்றி மக்களுக்குச் சிறந்த சிகிச்சை கிடைக்க வழிவகை செய்யவேண்டும்.
  4. புதிய கொள்கைகள் வகுத்தல் பதிவு செய்தல் மற்றும் கட்டணம் நிர்ணயித்தல் ஆகியவற்றில் இந்திய மருத்துவச் சங்கத்தையும் மற்ற மருத்துவச் சங்கங்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
  5. தன்னிச்சையான அதிக அதிகாரம் கொண்ட மருத்துவக் காப்பீட்டு குறைத்தீர் மன்றம் அமைத்து குறைகளையும் பிணக்குகளையும் சரி செய்து மக்களுக்கு சரியான மருத்துவச் சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இந்நிகழ்வில் மருத்துவத்துறையினர், தேசிய காப்பீட்டு கவுன்சில், நிவா பூவா காப்பீட்டு நிறுவனம் உட்பட பல காப்பீட்டு நிறுவனங்கள், மருத்துவமனை சங்கங்கள், பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்கள் கலந்துகொண்டனர்.