தீ தடுப்பு பாதுகாப்பு கருவிகள் நிறுவனமான ஏ.பி.சி. பயர் இன்டியா கோவையில் துவக்கம்!

தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு கருவிகளை மக்களுக்கு அளிப்பதில் முன்னணியில் இருக்கும் ஏ.பி.சி. பயர் இன்டியா, புதிய சூப்பர் மார்க்கெட் ஒன்றை தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவையில் காந்திபுரம், டாக்டர் நஞ்சப்பா சாலையில் திங்கட்கிழமை துவக்கியுள்ளது.

இந்நிகழ்விற்கு இந்திய தொழில் வர்த்தகசபை கோவை கிளையின் முன்னாள் தலைவரும், செல்வம் ஏஜென்சீஸ் உரிமையாளருமான நந்தக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய சூப்பர் மார்க்கெட்டை துவக்கி வைத்தார்.

இதில், முதல் விற்பனையை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் பிரைவேட் லிமிடெட் துணைத்தலைவர் திருமூர்த்தி தொடங்கி வைத்தார். தீயணைப்பு கருவியை அகர்வால் ஸ்வீட் பேலஸ் உத்கரஸ் அகர்வால் பெற்றுக் கொண்டார். அடுக்கு மாடி குடியிருப்புக்கான முதல் ஹைட்ரன்ட் கருவியை, கிரடாய் அமைப்பின் கோவை கிளை துணைத்தலைவர் அபிஷேக் பெற்றுக் கொண்டார்.

நிகழ்வில் பேசிய ஏபிசி பயர் இன்டியா உரிமையாளர் லாரன்ஸ், “இந்த புதிய சூப்பர் மார்க்கெட்டில் பல அதிநவீன புதிய கருவிகள் அறிமுகம் செய்துள்ளோம். அதுமட்டுமின்றி, இங்குள்ள ஒவ்வொரு கருவிகளின் செயல்பாடுகளை அறியவும் மற்றும் அனுபவமும் பெற முடியும். மேலும், திறன்வாய்ந்த உயர்ந்த செயல்திறனுடைய “இம்பேக்டர்” என்ற புதிய பிராண்டு தீயணைப்பு கருவிகளை அறிமுகம் செய்துள்ளோம். எங்கள் நிறுவனத்தில் மக்களுக்கு தீ தடுப்பு, பாதுகாப்பு பற்றிய பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வழங்கப்படும். அனைத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு எங்களது பயிற்சி மற்றும் கருவிகளை வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பு விருந்தினர் நந்தகுமார் பேசுகையில், இத்தகைய தீ தடுப்பு நிறுவனத்தை துவக்கிவைப்பது மிகவும் பெருமையாக உள்ளது என்றார்.

மேலும், துவக்க விழாவில், பிபி அசோஷியேட்ஸ் சுப்ரமணியன், கிரடாய் தலைவர் குகன் இளங்கோ, ஜூபிலன்ட் தலைவர் அபுதாஹீர், இந்திய பிளம்பிங் சங்கத்தின் கோவை கிளை தலைவர் பிரகாஷ் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.