புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான தொடக்க விழா

கோவை சிங்காநல்லூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் பழுதடைந்த 960 அடுக்குமாடி குடியிருப்புகளை அகற்றி விட்டு, பன்னடுக்கு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு வாழ்த்தி சிறப்புரையாற்றினார். கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில், கழக சொத்துப் பாதுகாப்புக் குழுத் துணைத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், கோவை மாநகராட்சி துணை மேயர் இரா.வெற்றிச் செல்வன், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி, சிங்காநல்லூர் பகுதி -2 திமுக செயலாளர் மு.சிவா, சிங்காநல்லூர் அடுக்குமாடி கட்டிட கூட்டு நடவடிக்கைகள் குழு தலைவர் ஜெயராமன், வட்டக்கழகச் செயலாளர்கள் முருகானந்தம், ஏ.எஸ்.நடராஜ், சிங்காநல்லூர் அடுக்குமாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் வழக்கறிஞர் முத்துக்குமார், தமிழ்மணி, மனோகரன், சுப்புராஜ்,மோகனசுந்தரி,குணசீலன்,மோகனசுந்தரம்,குணசேகரன், கண்ணன், சிங்கை பிரபாகரன் ex.mc,. கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையர் முத்துராமலிங்கம், கட்டுமான நிறுவன நிர்வாகிகள் சண்முகம், சுப்பராயன், கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள்,திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.