கோவை பாப்பீஸ் ஹோட்டலில் “லக்னோவி உணவுத் திருவிழா”

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா கோவில் எதிரில் அமைந்துள்ள பாப்பீஸ் ஹோட்டலில் லக்னோவி உணவுத் திருவிழா  14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. பத்து  நாட்கள் நடைபெறும் இந்த உணவுத் திருவிழா, இதில் பங்கேற்போரை நவாப் மற்றும் முகலாயக் காலத்துக்கு இட்டு செல்லும். முகலாய முறைப்படி, மசாலாக்கள் சேர்த்து சமைக்கப்பட்ட சைவ மற்றும் அசைவ உணவுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன.  இதுகுறித்து பாப்பீஸ் ஹோட்டல் மேலாளர் (செயல்பாடு) திரு.ஜெயராமன் கூறும்போது , இந்த லக்னோவி உணவுத் திருவிழாவில் – ஜஷோர்பா கோஷட் யக்னி, முர்க் பாட்லி ஷோர்பா, சப்ஜியோ கா அர்க், டால் கே யக்னி ஆகிய சைவ மற்றும் அசைவ வகை உணவுகள் இங்கு பரிமாறப்பட உள்ளன. உண்மையான லக்னோ உணவுகளின் சுவையும், நறுமணமும் மாறாமல் உணவுகள் எங்கள் பப்பிஸ் ஹோட்டல் தலைமை சமையல் கலைஞர் ராஜாவின் மேற்பார்வையில் சமைக்கப்பட்டு பரிமாறப்படும்.   லக்னோ உணவுப் பொருள்களை உண்டு மகிழ முன்பதிவு செய்ய 9566501999  என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த கண்காட்சியை அமிர்தானந்தமாயி அவர்களிடம் கடந்த 15 ஆண்டுகளாக பக்தையாக இருக்கும் திருமதி.ராதிகா அமிர்தாகோபால் குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். இந்த லக்னோ உணவுப் பொருள்கள் ஹோட்டலில் மதியம் 12.30 முதல் 3.00 மணி வரையும், மாலை 7.30 முதல் இரவு 11 மணி வரையும் ஹோட்டல் பிளானட் பார்பெக்யூ வளாகத்தில் கிடைக்கும். இந்த உணவு திருவிழாவில் மொத்தம் 90 வகை உணவுகள் பரிமாறப்பட உள்ளன. இதற்கு கட்டணமாக மதிய உணவுக்கு ரூபாய்.777வைசம் மற்றும் ரூ.888 அசைவம், இரவு டின்னர் கட்டணமாக ரூ.888 சைவம் மற்றும் ரூ.999 அசைவம் நிர்ணயக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும்.