புரோசோன் மாலில் மகளிர் தின சிறப்பு கொண்டாட்டம் மற்றும் சலுகைகள்

புரோசோன் மாலில் மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 19-ம் தேதி வரை “வாவ் ஒண்டர் உமன்” என்ற பெயரில் பெண்கள் தின சிறப்பு கொண்டாட்டம் மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.

இது குறித்து புரோசோன் மாலின் தலைமை மேலாளர் (நிதி மற்றும் நிர்வாகம்) பாபு, செயலியக்க தலைவர் முசாமில், மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பிரிங்ஸ்டன் நாதன், செயலியக்கம் மற்றும் சந்தை பிரிவு தலைவர் முரளி மற்றும் செயலியக்க மேலாளர் விபின் குமார் ஆகியோர் கூறியதாவது: பெண்களை போற்றும் விதமாகவும், பெண்களின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

18ம் நூற்றாண்டில் பெண்கள் என்றால் வீட்டு வேலைகளுக்கு மட்டுமே சரிவருவார்கள் என்று முடக்கிவைக்கப்பட்டார்கள். இந்த நிலை மெல்ல மாறி, 1850 களில் தொழிற்சாலை, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பெண்கள் கால்பதிக்க தொடங்கினர்.

பெண்களை போற்றும் விதமாக கோவை புரோசோன் மால் ஆண்டு தோறும் பல சலுகைகளை வழங்கி வருகின்றது.

இந்த ஆண்டு மகளிருக்கு சிறப்பு சலுகையாக “வாவ் ஒண்டர் உமன்” என்ற பெயரில் சிறப்பு விற்பனையாக ரூபாய் 2,999 மதிப்பிற்கு ஷாப்பிங் செய்யும் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 மகளிர் வாடிக்கையாளர்களுக்கு டோனி அண்டு கை வழங்கும் ரூபாய் 3000 மதிப்புள்ள வவுச்சர்களும், 10 மகளிர் வாடிக்கையாளர்களுக்கு முழு உடல் பரிசோதனையும் மேலும் உத்தரவாதமான பரிசுகளும் தள்ளுபடி வவுச்சர்களும் வழங்கப்பட உள்ளது.

மேலும் பெண் வாடிக்கையாளர்களுக்கு இலவச கார் பார்க்கிங், இலவச மெகந்தி, கிப்ட் ஹம்பர்ஸ்கள் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்கில் பெண்களுக்கு என தனித்துவமான காட்சியும் திரையிடப்பட உள்ளது என தெரிவித்தனர்.

மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர். அரவிந்த் ஐவிஎஃப் மருத்துவமனையின் முதுநிலை ஆலோசகர் டாக்டர். ஸ்ரீ ரன்ஜினி சண்முகராஜ், நிர்மலா மகளிர் கல்லூரி, முதல்வர், மேரி பெபினா, விவேகானந்தா இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட், நிதி மற்றும் நிர்வாக தலைவர் உமாமகேஷ்வரி, புனித லியாண்டர்ஸ் பள்ளியின் முதல்வர் லீனா, பேசன் ஆர்ட் இன்ஸ்ட்டியூட் இயக்குனர் சுகுணா ஆகியோர் கலந்து கொண்டனர்.