ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் மகளிர் தின விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் ஐ.இ.இ.இ வுமன் இன் இன்ஜினியரிங் மாணவியர் குழு , வுமன் எம்பொவெர்மென்ட் குழு ஆகியவற்றுடன் இணைந்து சர்வேதேச மகளிர் தின விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் அலமேலு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய கூடைப்பந்து அணி கேப்டன் பத்மஸ்ரீ அனிதா பால்துரை கலந்து கொண்டார். அவர் பேசும் போது, பெண்கள் மற்றும் மாணவியர்கள் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் விளையாட்டு துறையில் எவ்வாறு சாதிக்கலாம் என்பதனை தான் பெற்ற அனுபவங்களை கொண்டு விளக்கினார். மேலும் இக்காலத்து பெண்கள் எவ்வாறு குடும்பம் மற்றும் அலுவலகத்தில் நேர சமநிலை படுத்துதலை சமபங்குடன் பாவித்துக் கொள்ள வேண்டும் என்பதனை விவரித்தார்.

வாழ்க்கையில் தோல்வி என்பது ஒரு பாடமே, தோல்வியில் இருந்து மீண்டு வந்து பெண்கள் எவ்வாறு முன்னேற்ற பாதையில் கால் பதிக்க வேண்டுமென உத்வேகத்தை ஊட்டினார். எந்த ஒரு துறையானாலும் ஆர்வம் மட்டுமே நம்மை முன்னேற்ற பாதையில் நடத்தி செல்லும் என்பதை விளக்கினார்.

விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் உமா, கல்லூரியின் பேராசிரியர் உதயராணி, வுமன் இன் இன்ஜினியரிங் துறை உறுப்பினர் ஜான்சிராணி, உடற்கல்வி ஆசிரியர்கள் நித்தியானந்தன், உமாராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.