என்.ஜி.பி கல்லூரியில் வனவிலங்குகளின் புகைப்பட கண்காட்சி

உலக வனவிலங்கு தினத்தை நினைவு கூறும் வகையில் டாக்டர் என்.ஜி.பி தொழில் நுட்பக் கல்லூரியில் வனவிலங்குகள் குறித்த புகைப்பட கண்காட்சி மூன்று நாட்களுக்கு நடைபெற்றது.

புகழ்பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞர் சுப்பிரமணியம் சொக்கலிங்கம் கடந்த நாற்பது ஆண்டுக‌ளாக காடுகளிலும், சரணாலயங்களிலும் அலைந்து திரிந்து எடுத்த அரிய வகை புகைப்படங்கள் இதில் கண்காட்சிபடுத்தப்பட்டன.

பறவைகள், விலங்குகள், ஊர்வன, பட்டாம்பூச்சிகள், மற்றும் பிற இனங்கள் உள்ளடக்கிய பல்வேறு காட்டு வாழ்க்கை புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. இவற்றில் வனவிலங்குகள் வாழ்க்கையில் மனித தலையீடு பற்றி பேசும் சில புகைப்படங்கள் உள்ளன. மேலும் சில புகைப்படங்கள் தாங்களாகவே வித்தியாசமான கதைகளை உருவாக்குகின்றன.

கோவையில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். வனவிலங்கு புகைப்பட கலைஞர் சுப்பிரமணியம் சொக்கலிங்கத்தின் புகைப்பட பயிற்சி பட்டறையில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.