பழனியில் குடமுழுக்கு விழா கோலாகலம்

தமிழில் மந்திரங்கள் முழங்க, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகமலாக நடைபெற்றது.

திருக்கோயிலில் பக்தர்களின் அரோகரா முழக்கம் விண்ணை முட்டிய நிலையில் நன்னீராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தன் அலங்காரம் என தமிழ் ஒலிக்க நன்னீராட்டு விழா நடைபெற்றது.

கங்கை, காவிரி, சண்முக நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்கள் கலசங்கள் மீது ஊற்றப்பட்டன. மேலும், குடமுழுக்கு நன்னீரை பக்தர்கள் மீது தெளிக்க 8 இடங்களில் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.

குடமுழுக்கு விழாவில் ராஜகோபுரம் மற்றும் தங்க கோபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.