எஸ்.என்.எம்.வி கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

கோவை ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (எஸ்.என்.எம்.வி) குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐ.டி.எப்.சி சொத்து மேலாண்மை நிறுவன (மியூச்சுவல் பண்ட்) விற்பனையின் துணைத்தலைவர் ஆண்டோ வினே (எஸ்.என்.எம்.வி கல்லூரியின் முன்னாள் மாணவர்) கலந்து கொண்டார்.

அவர் சிறப்புரையாற்றி பேசுகையில்: இந்தியாவில் வளங்கள் கொட்டிக் கிடக்கின்றது. நம் இளைஞர்கள் அவ்வளங்களைக் கொண்டு தேசத்தை வலுவடைய செய்ய வேண்டும். நம்முடைய கருத்துக்களை சுதந்திரத்துடன் எடுத்துரைக்கின்றோம் அதற்கு நம் அரசியலமைப்பு முறையே காரணம், அவ்வரசியலமைப்பை உருவாக்கிய டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்களை என்றும் நினைவில் கொண்டு வணங்குவோம். நாட்டின் எல்லையில் நமக்காக போராடும் ராணுவ வீரர்களுக்கும், காவல்துறையினருக்கும் நாம் உரிய மரியாதை செலுத்த வேண்டும் என பேசினார்.

இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் மகாவீர் போத்ரா, துணைச்செயலாளர் பரத்குமார் ஜெகமணி, நிறுவனர் கனக்லால் அபைத் சந்த், முதல்வர் சுப்பிரமணி, மேலாண்மைத்துறை இயக்குநர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். பின்னர் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றது.