தமிழ்நாடு என்றென்றும் இருக்கிறது – சு.வெங்கடேசன் எம்.பி., ட்வீட்

தமிழ்நாடு, தமிழகம் சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக காசி மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான தொடர்பை குறிக்கவே தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். மேலும் அந்தக் காலத்தில் ‘தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், ‘தமிழகம்’ என்பதை ‘மிகவும் பொருத்தமான வெளிப்பாடு’ என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன் என்றும், தனது கண்ணோட்டத்தை ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல’ பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இதற்கு பதில் அளிக்கும் விதமாக மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில், “அந்தக்காலத்தில் தமிழ்நாடு இல்லை” என்கிறார் ஆளுநர் ரவி. அவர் அனுப்பிய பொங்கல் விழா அழைப்பிதழில் மட்டும் தான் தமிழ்நாடு இல்லை. மற்ற படி தமிழ்நாடு என்றென்றும் இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.