நேஷனல் மாடல் பள்ளியின் ஆண்டுவிழா

நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியின் 17ம் ஆண்டுவிழா வியாழக்கிழமை பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக நோ ஃபுட் வேஸ்டின் கோ பவுண்டர் தினேஷ் மாணிக்கம் கலந்து கொண்டார்.

நேஷனல் மாடல் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர் பேபி, நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியின் சீஃப் கோர்டினேட்டர்கள் லாவண்யா, நிர்மலா, பிரியா மற்றும் கோத்தகிரி நேஷனல் மாடல் பள்ளியின் முதல்வர் பானு ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்கள் பலர் உற்சாகமாக கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும், இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.