கவிதாசனின் ‘திசைகளை திரும்பி பார்க்கிறேன்’ நூல் வெளியீட்டு விழா

சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் 64 ஆவது படைப்பாகிய, திசைகளை திரும்பி பார்க்கிறேன் – பாகம் 4 என்ற நூலின் வெளியீட்டு விழா, கோவையில் உள்ள கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. முதல் பிரதியை கல்லூரியின் முதல்வர் பாலசுப்பிரமணியம் வெளியிட, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் மேனாள் கூடுதல் இயக்குனர் அருள் பெற்றுக் கொண்டார். கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முருகேசன் மற்றும் கல்லூரியின் முதன்மை நிர்வாக அலுவலர் சின்னுசாமி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் நண்பர்கள் சிந்தனைப் பூங்கா, வசந்த வாசல் கவிமன்ற நண்பர்கள் மற்றும் பல படைப்பாளிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். கவிஞர் கவிதாசன் அவர்கள் ஆண்டுதோறும் தனது பிறந்தநாளை ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று புதிய நூலினை வெளியிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளார். அதுபோல இந்த வருடமும் தனது பிறந்த நாளை முன்னிட்டு இந்த புதிய நூலை வெளியிட்டு உள்ளார். மேலும் ஒரு லட்சம் ரூபாய் வைப்பு நிதியுடன் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறையில் செயல்பட்டு வருகின்ற சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் அறக்கட்டளைக்கு கூடுதல்  வைப்பு நிதியாக மேலும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் கவிதாசன் கல்லூரி முதல்வரிடம் வழங்கினார்.