இந்தியாவில் இ சிகரெட் விற்பனைக்கு தடை

இந்தியாவில் ‘இ – சிகரெட்’ என அழைக்கப்படும், எலெக்ட்ரானிக் சிகரெட்டுகள் பயன்பாட்டுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சிகரெட்டில் இருக்கும் புகையிலை காரணமாக அதை புகைப்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டு, ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். இதற்கு மாற்றாக, ‘இ – சிகரெட்’ வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிகோடின் திரவம் நிரப்பப்பட்ட இந்த சிகரெட்டுகளால், புற்று நோய் ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதால், இதற்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டில்லியில் நடந்த மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.