கே.ஐ.டி கல்லூரியில் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள கே.ஐ.டி-கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியில்  தமிழக அரசு அறிவித்திருந்த போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் மோகன்தாஸ்காந்தி, துணை முதல்வர் ரமேஷ், சூலூர் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சூலூர் வருவாய் ஆய்வாளர் ஜெயஸ்ரீ, கண்ணம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சத்யபாமா ஆகியோர் முன்னிலையில் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்கள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர்.

அந்த உறுதிமொழியில் நாட்டை போதையில்லா நாடாக மாற்ற அரசுக்கு ஆதரவளிப்பதாகவும், போதைப்பொருள் உபயோகப்படுத்த மாட்டோம் என்றும் உறுதிமொழி எடுத்தனர். போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர்களும் கலந்து கொண்டனர்.