இந்துஸ்தான் பள்ளியில் என்.சி.சி துவக்கவிழா

இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று புதிதாக என்.சி.சி துவக்கப்பட்டுள்ளது.

கோவை, இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக (N C C )தேசிய மாணவர் படையின் துவக்க விழா இன்று நடைபெற்றது.

இப்பிரிவு 4 – பட்டாலியன் கீழ் செயல்படும். இதில், 50 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது ராணுவ பிரிவாக செயல்படும். இங்கு புதிதாக துவக்கப்பட்டதால், இந்த ஆண்டு 25 மாணவர்களும், அடுத்தாண்டு 25 மாணவர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்படும் என்.சி.சி மாணவர்களுக்கு தேவையான அனைத்து சீருடைகளும் பள்ளியிலிருந்தே வழங்கப்படும்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக , 4-பட்டாலியனின் ஏடம் அதிகாரி பரத் கலந்து கொண்டு என்.சி.சி விழாவை துவக்கி வைத்தார். மேலும், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், முதன்மைக்கல்வி அதிகாரி கருணாகரன், பள்ளியின் துணை முதல்வர் யோகம், சுபைதார் மேஜர் ரவீந்திரன் மற்றும் என்.சி.சி மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.