நூறு சிலம்பக்கலை ஆசிரியர்களுக்கு தலா ஒரு லட்சம் – அமைச்சர் மெய்யநாதன்

தமிழகத்தில் 100 சிலம்பக்கலை ஆசிரியர்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில்  தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. உலக சாதனை நிகழ்ச்சியை தமிழக சுற்றுச் சூழல் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

ஐந்து மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுமார் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மற்றும் சிறுமிகள் கலந்து கொண்டனர்.  அங்கு தமிழக மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கெளதமன் மற்றும் சிலம்பக்கலை பயிற்றுவிற்கும் ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர். இதில், கை அசராமல் இளைஞர்கள், சிலம்பக்கலை வீரர்களின் உலக சாதனை முயற்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், விரைவில் தமிழகத்தில் 100 சிலம்பக்கலை ஆசிரியர்களை முறையாக தேர்வு செய்து தலா ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று, தெரிவித்தார்.