ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ஆண்டு விழா

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ஆண்டு விழா செவ்வாய்க் கிழமை அன்று நடைபெற்றது.

எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கினார். கல்லூரியின் கணினி மற்றும் பொறியியல் துறை தலைவர் பார்வதி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பால்ராஜ், 2021-2022 க்கான ஆண்டு அறிக்கை வழங்கினார்.

இவ்விழாவில் உயிர் அறிவியல் துறை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விஞ்ஞானி கதிர்வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: இந்திய பாதுகாப்புத் துறையில் ஆராய்ச்சிக்கான நோக்கம் மற்றும் வாய்ப்புகள் குறித்தும், மாணவ சமுதாயத்திற்கு நல்ல தொழில் அமைவதற்கு சுய ஒழுக்கத்தின் முக்கியத்துவம் பற்றிக் கூறினார். மேலும், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சர்வதேச போட்டிகளில் பங்குபெற்றுள்ளதை பாராட்டினார்.

நிகழ்ச்சியில், 2021-2022 ஆண்டிற்கான சிறந்த மாணவர், மாணவியர் விருதை எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த அபிஷேக் உதித், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறை மாணவி திவ்யா பெற்றுக்கொண்டனர்.

கல்லூரியில் வெவ்வேறு துறையை சார்ந்த தகுதியான மாணவர்களுக்கு பரிசுகளும், விருதுகளும் சிறப்பு விருந்தினரால் வழங்கப்பட்டது.