டெல்டா குறுவை சாகுபடி: மேட்டூர் அணை திறப்பு

டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை முதல்வர் மு.க ஸ்டாலின் செவ்வாய்க் கிழமை காலை திறந்து வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் வரலாற்றில் முதல்முறையாக ஜூன் 12-ஆம் தேதிக்கு முன்பே அணை திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மே மாதத்தில் கடந்த 1947-ம் ஆண்டில் மட்டுமே அணை திறக்கப்பட்டது. நடப்பாண்டு அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால், முன்கூட்டியே மேட்டூர் அணையை முதல்வர் திறந்து வைத்தார்.

மேட்டூர் அணை திறப்பின் மூலம் சுமார் ஐந்தரை லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.

இன்றைய தினம் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் 3 நாட்களில் கல்லணையை வந்து சேரும். அங்கு இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.