கே.ஐ.டி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கே.ஐ.டி- கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் 9 – வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் நீரஜ் சக்சேனா (Advisar, Institutional Development Cell, AICTE New Delhi) கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர் கூறுகையில், கல்வியின் முக்கியத்துவத்தையும், அதனால் மாணவர்கள் வாழ்வில் அடையக்கூடிய நல்ல முன்னேற்றத்தை பற்றியும் எடுத்து கூறினார். நம் நாட்டின் பல்வேறு தொழில் துறைகளில் முக்கியமானது பொறியியல் துறை, இன்றைய சூழலில் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

அத்தகைய சிறப்புகள் நிறைந்த பொறியியல் துறையில் மாணவ, மாணவியர்கள் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக் கொண்டு பல புதிய சாதனைகளைப் புரிய வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர் ஏ.ஐ.சி.டி.இ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ஏ.ஐ.சி.டி.இ-ஐடியா (ஐடியா டெவலப்மென்ட், மதிப்பீடு மற்றும் அப்ளிகேஷன்) ஆய்வகத்தைப் பற்றி கூறினார். ஒரு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், அறிவு சார்ந்த வல்லரசு நாடாக உருவாக்குவதற்கும் துணைப்புரிவது உயர்கல்விதான் என்று கூறினார்.

பட்டமளிப்பு விழாவில் கல்லூரி நிறுவனத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, கல்லூரி துணைத் தலைவர் இந்து முருகேசன், கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, கல்லூரி துணை முதல்வர் ரமேஷ், அனைத்து துறைத்தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.