இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் உணவு தொழில்நுட்பத்துறை மற்றும் இந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து “உணவைப் பாதுகாப்பதற்கான பசுமைத் தொழில் நுட்பங்கள்” என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கை வெள்ளிக்கிழமை அன்று இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் நடத்தியது.

இச்சர்வதேச கருத்தரங்கில் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவிலிருந்து 200 க்கும் மேற்பட்ட, உணவு பதப்படுத்துதல் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்றனர்.

மேலும் அவர்களுடைய பேப்பர் பிரசன்டேசன், மாடல்கள், போஸ்டர்கள் மற்றும் அவர்களுடைய சொத்த சிந்தனைகளை இக்கருத்தரங்கில் தங்களது படைப்புகளாக வழங்கினர்.

இதன் மூலம் நாம் இயற்கையை சிதைக்காமல் உணவுகளை வீணாக்காமல் உணவுகளை எவ்வாறு பதப்படுத்த முடியும் என்பனவற்றை இக்கருத்தரங்கில் கலந்துரையாடினர். மேலும் மிகச்சிறப்பாக தங்களுடைய படைப்புகளையும், ஆராய்ச்சியின் விளக்கத்தையும் வெளிப்படுத்திய வல்லுநர்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும், ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

இந்தக் கருத்தரங்கில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா சதீஷ்குமார், முதன்மை கல்வி அதிகாரி கருணாகரன், இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியின் முதல்வர் ஐெயா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி, டீன் மகுடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.