எஸ்.என்.எம்.வி கல்லூரியில் ‘டெக்னோமேன்சர் 22’

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (எஸ்.என்.எம்.வி) தொழில்நுட்பவியல் துறை சார்பாகக் கல்லூரி மாணவர்களுக்கிடையே டெக்னோமேன்சர் 22 (Technomanzer 22) நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் சுப்பிரமணி தலைமையேற்று மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் தலைமையுரை வழங்கினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கேரளா திருவனந்தபுரம் அலையன்ஸ் டெக்னாலஜி, டெக்னிக்கல் லீட், ஆட்டோமேன் ஆலோசகர், பிரவீன்குமார் ராஜேந்திரன் கலந்து கொண்டு “மாணவர்கள் தங்கள் துறைசார்ந்த அனுபவத்தினை பெற வேண்டும், கிளவுட் சூழல், டேட்டா மைனிங், ஹைப்ரிட் தொழில்நுட்பம் போன்ற தொழில்நுட்பங்கள் பற்றி அறிதல் வேண்டும்” என சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் ஆய்வுக் கட்டுரை வழங்கல் (Paper presentation), பிரிக் (Connection), புதிர் (Quiz), கோடிகோ (Dcpugging), மிஸ்டிபை (Piuzzle) ஆகிய போட்டிகள் நடைபெற்றன. 15 மாணவர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினர். இப்போட்டிகளில் 230 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஒட்டுமொத்த சாம்பியன் விருதினை கோவை ஸ்ரீ கிரு்ணா ஆதித்யா கல்லூரி மாணவர்கள் பெற்றனர். இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மேலும் மேலாண்மை இயக்குனர் முத்துகுமார், துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.