ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், அகதரமதிப்பீட்டுக்குழு (IQAC) சார்பில், தேசிய தரநிர்ணயக்குழுவின் (NAAC) நிதியுதவியுடன் ‘புதியகல்விக் கொள்கை-2020: தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்பித்தல் தரத்தை மாற்றிக் கொள்ளுதல்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.

இதன் தொடக்க விழாவிற்கு, கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் தேசிய தரநிர்ணயக்குழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணபிரியா கருத்தரங்கின் முக்கியத்துவம் மற்றும் நோக்கம் குறித்து உரையாற்றினார்.

புனே சி.எஸ்.ஐ.ஆர் தேசிய வேதியியல் ஆய்வக மூத்த தலைமை விஞ்ஞானி கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நாம் எந்த நிலையில் இருந்தாலும், ஒவ்வொரு நாளையும் புதிய நாளாக பாவித்து செயல்படவேண்டும். ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

தோல்விகளே வெற்றிக்கான படிக்கட்டுகள். தோல்வியடைந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிய முற்பட வேண்டுமே தவிர, துவண்டுவிடக்கூடாது. எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ளவேண்டும்.

எப்போதும் உயர்ந்த எண்ணங்களுடன் பரந்த மனப்பான்மையுடன் செயல்படவேண்டும். நம்முடைய ஈடுபாடு நம்முடைய தொழிலாக இருந்தால் வெற்றி நிச்சயம். கற்றல், கற்பித்தலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

எனவே, தகவல் தொடர்பு தொழில் நுட்பக் கருவிகளைப் (ஐசிடிடூல்ஸ்) பயன்படுத்தி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தற்போது கற்பிக்கவேண்டியதுஅவசியம் என கூறினார்.

இந்த கருத்தரங்கில் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் 600 பேர்பங்கேற்றுள்ளனர். கூகுள் மீ்ட் வழியாக நடைபெற்ற இக்கருத்தரங்கில் பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரி நுண்ணுயிரியல் துறை இணைப் பேராசிரியர் சையதுவாஜீத், காக்னி சென்ட் நிறுவன அவுட்ரீச் இந்தியத் தலைவர் பாலகுமார் தங்கவேலு, னைஜீரியாஸ்கைலைன் பல்கலைக்கழக டீன் செந்தில்குமார், மங்களூரு அரசு முதல் தரக் கல்லூரி இணைப் பேராசிரியர் மனோஜ்குமார் ஆகியோர் உரையாற்றினர்.