ராஜஸ்தான், சத்தீஸ்கர் முதல்வர்கள் சோனியாவுடன் சந்திப்பு

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் ஆகிய இருவரும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை புதன்கிழமை அன்று சந்தித்துப் பேசியுள்ளனர்.

டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தங்கள் மாநில அரசியல் சூழ்நிலை குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் பேசியுள்ளதோடு 2024 பொதுத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

மேலும், கடந்த 4 நாள்களில் 3 முறை சோனியா – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடைபெற்ற நிலையில், இன்று 4 வது முறையாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சிக்கான ஆய்வறிக்கையை கடந்த வாரத்தில் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் அளித்தார். இந்த ஆய்வறிக்கையில், காங்கிரஸ் கூட்டணி வைக்க வேண்டிய மாநிலங்கள், கட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.