ஸ்மார்ட் சிட்டி – ஏ.ஐ.சி ரைஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை ஸ்மார்ட் சிட்டியில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் விதமாக, ஸ்மார்ட் சிட்டி அமைப்பு மற்றும் இரத்தினம் கல்விக் குழுமங்களின் ஏ.ஐ.சி ரைஸ் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக கோவையில் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் தமிழகத்தில் முக்கிய நகரமான கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டியில் புதிய தொழில் முனைவோர் மையம் உருவாக்குதல் மற்றும் ஐக்கிய நாடுகளின் முன்னேற்றத்திற்கான இலக்குகளை அடையும் விதமாக கோவை ஸ்மார்ட் சிட்டி அமைப்புடன் இணைந்து, கோவை இரத்தினம் கல்விக் குழுமங்களின் ஏ.ஐ.சி ரைஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டது.

ஏ.ஐ.சி ரைஸ் வளாகத்தில் நடைபெற்ற இதற்கான விழாவில் தலைமை செயல் அதிகாரி மதன் ஏ செந்தில் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கோவை ஸ்மார்ட் சிட்டி அமைப்பின் நிர்வாக இயக்குநர் ராஜா கோபால் சுங்கரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் முக்கிய விருந்தினர்கள் பேசுகையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமே ஸ்மார்ட் சிட்டியில் புதிய தொழில் முனைவோர் மையம் உருவாக்கி, புதிய யோசைனைகளை கோவை இரத்தினம் கல்விக் குழுமங்களின் ஏ.ஐ.சி ரைஸ் வழங்கும் எனவும், இதனால் நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ஏ.ஐ.சி ரைஸ் மாணவர்கள் கோவை ஸ்மார்ட் சிட்டி அமைப்பு தரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார்கள் என தெரிவித்தனர்.