தமிழ்நாடு வேளாண் பல்கலையில் ஆய்வகம் திறப்பு

கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் CENTRE FOR STUDENTS WELFARE சார்பில் டிஜிட்டல் மொழி ஆய்வகம் புதுப்பிக்கப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டிற்காக புதன்கிழமை அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதா லட்சுமி இந்த ஆய்வகத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். ரகுசந்தர், டீன் (CSW) மற்றும் சிவகுமார், இயக்குனர் (ABD) ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் துணைவேந்தருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

இந்த மொழி ஆய்வகம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இணைப்பதுடன், மாணவர்களின் திறம்பட கற்றலுக்கான மையமாகவும் விளங்குவதோடு, தேசிய அளவிலான தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராவதற்கும், பல மொழிகளை கற்பதற்கும் இந்த ஆய்வகம் உதவியாக இருக்கும்.