மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் வானதி சீனிவாசன் சந்திப்பு

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்களை சந்தித்து பேசியுள்ளார்.

இச்சந்திப்பில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் சேவையை தனது தொகுதி மக்களுக்கு விரிவாக கொண்டு சேர்ப்பது குறித்தும் மற்றும் நாடு முழுவதும் பெண்களுக்கான உடனடி சிகிச்சை மேற்கொள்வது குறித்தும் வானதி விவாதித்தார்.

ஏழை எளிய மக்கள் தரமான மருத்துவமனைகளில் மருத்துவ சேவையை பெறுவதற்கான வாய்ப்பு குறித்தும் இந்த சந்திப்பின் போது பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.