ராமகிருஷ்ணா கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர்
பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் ஆர். பிரபு வரவேற்றுப் பேசினார்.

அதைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் புகைப்படம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 1996 முதல் 1999 வரை படித்த முன்னாள் மாணவர்கள் 30 பேர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர்கள் சங்கப் பொருளாளர் ஆர். ஷோபனா நன்றி கூறினார்.