வங்கி தேர்வுகளில் ‘வெராண்டா ரேஸ்’ மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி

வங்கி பணியாளர்களுக்கு நடைபெற்ற தேர்வில் கோவை வெராண்டா ரேஸ் பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

‘IBPS’ எனப்படும் வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில், கடந்த ஆண்டு நடந்த IBPS PO, SO, CLERK போன்ற பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதில், வெராண்டா ரேஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வங்கி அதிகாரிகளாகவும், சிறப்பு அதிகாரிகளாகவும், அலுவலக உதவியாளர்களாகவும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்வு ‌எழுதிய மாணவர்களின் விகிதமும் , தேர்ச்சி ‌பெற்ற மாணவர்களின் விகிதமும் 10% உயர்ந்துள்ளது.

இவர்கள் அனைவருக்கும் வெராண்டா ரேஸ் பயிற்சி மைய நிறுவனர் பரத்சீமான், பங்குதாரர்கள் விக்னேஷ், ராகுல், சிபி கோயம்புத்தூர் மைய ஒருங்கிணைப்பாளர்கள் வேலுமணி, கிறிஸ்டி லாவண்யா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். மேலும் கோயம்புத்தூர் கிளை சார்பில் நினைவுப் பரிசும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.