சங்கரா கல்லூரியில் பேக்கரி உணவு கண்காட்சி

கோவை, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறை சார்பாக பேக்கர்ஸ் பேஸ்கெட் அடுமனைப் பொருட்கள் காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது.

இக்கண்காட்சியை கல்லூரியின் இணை செயலாளர் சந்தியா ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இதில் மாணவர்கள் மோல்டன் லாவா சாக்லேட், பிளாக் ஃபாரஸ்ட் கேக், டஃப் நட்ஸ், மஃபின்கள், சாக்லேட் பிரவுனி, குரோசண்ட்ஸ், மிலி ஃபுவில், ஃப்ரூட் ஜெல்லி, ஃப்ரூட் கஸ்டர்ட் டார்ட், பஃப்ஸ் மற்றும் சில பேஸ்ட்ரிகள் போன்ற தின்பண்டங்களைத் தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்தனர்.

உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறைத் தலைவர் ஆனந்தராஜ் தலைமையிலும், உதவிப் பேராசிரியர் ராஜசேகரின் வழிகாட்டுதலிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் பேக்கிங், கேக் தயாரித்தல், தயாரிப்புகளை மேம்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற நுணுக்கங்கள், அனுபவத்தை பெற்றுத்தந்தது.

இக்கண்காட்சியில் கல்லூரியின் துணை இணைச் செயலாளர் நித்யா ராமச்சந்திரன், கல்லூரி முதல்வர் ராதிகா, மற்றும் துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினார்கள்.