மரக்கன்று நடும் நிகழ்வு: இலக்குமி இளஞ்செல்வி துவக்கி வைப்பு

கோவை மாநகராட்சி ஹட்கோ காலனி பகுதியில் உள்ள, பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்கா வளாகத்தில், மரக்கன்றுகள் நடும் நிகழ்வை 52 வது வார்டு மாமன்ற உறுப்பினர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் – 2022 கீழ், கோவை மாநகராட்சி, 52 வது வார்டு, சவுரிபாளையம் ஹட்கோ காலனி பகுதியில் உள்ள, பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்கா வளாகத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்வை 52 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.

பின்னர் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தனிநபர் வேலைக்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர் புதூர் மணிகண்டன், பீளமேடு பகுதிக்கழகம்-1 பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி 52 வது வார்டு AE ஃபெர்மான் அலி, வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் தகடூர் செல்வம், ரவி, ரங்கதுரை, ஹட்கோ காலனி நிர்வாகிகள் ராஜாராம், வீராச்சாமி, கண்ணதாசன், பூம்புகார் விஜய், மாணிக்கம், சிவக்குமார், மாணிக்கம், ராமச்சந்திரன், முத்துப்பாண்டி, பரிமளம், கீர்த்தனா, அமுதா, கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.