தோட்டக்கலை மேலாண்மை இயந்திரங்கள் கோவை மேயரிடம் வழங்கல்

தோட்டக்கலை மேலாண்மைக்காக 2 டிராக்டர் மற்றும் ஷ்ரெடிங் இயந்திரங்கள் தனியார் நிறுவனம் சார்பில் கோவை மேயரிடம் வழங்கல்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 69 க்குட்பட்ட சாய்பாபா காலனி பாரதி பூங்கா வீதியில் கோவை மாநகராட்சி பயன்பாட்டிற்கு தோட்டக்கலை மேலாண்மைக்காக 2 டிராக்டர் மற்றும் ஷ்ரெடிங் இயந்திரங்களை தனியார் நிறுவனம் சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் இடம் இன்று வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபாலன் முன்னிலை வகித்தார். கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் சேகரமாகும் தோட்ட கழிவுகள் மற்றும் மரக்கழிகவுகள் வெள்ளலூர் உரக்கிடங்கு கொண்டு செல்வதால் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் எளிதில் தீப்பிடித்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

இதனை தடுக்க அந்த பகுதியிலேயே மரக்கழிவு வகைகளை இதற்கான இயந்திரத்தால் பொடி செய்து வார்டு பகுதியிலேயே மரங்களுக்கு உரமாக பயன்படுத்தவும், நுண் கழிவுகளுடன் சேர்த்து உரமாகவும் பயன்படுத்தவும் முடியும்.

இதனால் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு செல்லும் குப்பைகளின் அளவும் குறைக்கப்படுகிறது. இவ்வகையான இயந்திரம் மண்டலத்திற்கு 1 வீதம் 5 உள்ளது. தற்போது தனியார் நிறுவன நிர்வாகத்தில் சி.எஸ்.ஆர் நிதி திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பிலான 2 டிராக்டர் மற்றும் ஷ்ரெட்டிங் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ் குமார், 69 வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார், உதவி கமிஷனர் நிர்வாகம் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.