உலக அமைதியை வலியுறுத்தி வேலம்மாள் மாணவர்கள்அமைதி வழிபாடு

சென்னை முகப்பேர் வேலம்மாள் மையப்பள்ளியின் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் ரஷ்யா உக்ரைன் நாடுகளிடையே நடைபெறும் போரில் இருநாட்டு மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களது அமைதியான நல்வாழ்வுக்காகவும் மேலும் உலக அமைதியை வலியுறுத்தியும் இறைவனைப் பிரார்த்திக்கும் அமைதி வழிபாட்டு கூட்டம் நடைபெற்றது.

இவ்வழிபாட்டு கூட்டத்தில் அபாயகரமான போர்ச் சூழலில் உள்ள ரஷ்யா உக்ரைன் நாடுகளின் போர்ப்பதற்றம் நீங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டி இறைவனைப் பிரார்த்தித்தனர்.

போரைத் தவிர்த்து அமைதியை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்த மாணவர்கள் விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தினர்.

பின்னர் மாணவர்களிடையே பேசிய பள்ளி துணை முதல்வர் சுமதி, சிதைந்த கட்டிடங்களோடு சிதைந்து விடாமல் மனிதநேயம் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தற்போதுள்ள போர்ச்சூழலையும் விவரித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார் மற்றும் யுத்தகளம் தவிர்த்தால் மகிழ்ச்சிக் களமாகும் வாழ்வு என்பதை மாணவர்கள் மனதில் நிலைநிறுத்தினார்.