கே.பி.ஆர் கலை கல்லூரியில் இணைய வழிக் கருத்தரங்கு

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, கணினி அறிவியல் துறை சார்பில் இணைய வழிக் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரியின் முதலவர் பாலுசாமி தலைமை வகித்த இந்நிகழ்விற்கு, சிறப்பு விருந்தினராக கொங்கு இன்ஜினியரிங் கல்லூரியின் டெக்னாலஜி பிஸ்னஸ் இங்க்யூபேட்டர், ப்ராஜெக்ட் கோஆடினேட்டர் கார்த்திக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர் பேசுகையில், புதிய கண்டுபிடிப்புகளை, நம் அன்றாட வாழ்வில் உள்ள பிரச்சனைகளை கண்டறிவதன் முலமே நம்மால் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும். அதற்கு மாணவர்கள் முதலில் எவ்வாறு ஒரு நிகழ்வை புதுமையான கோணத்தில் அணுகுவது என்பதைக் கண்டறிய வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது எண்ணெற்ற புதுமையான கண்டுபிடிப்புகளை நம் சமூகத்திற்கு வழங்க முடியும். நம் நாட்டில் இவ்வாறான கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமையான யோசனைகளுக்கு உதவும் முதலீட்டாளர்கள் நிறைய உள்ளனர். அவர்களின் உதவியை பயன்படுத்தி எவ்வாறு மாணாக்கர்கள் தங்களின் யோசனைகளை தயாரிப்பு நிலைக்கு மாற்றுவது என்பது பற்றி விரிவாக எடுத்த்துரைத்தார். மேலும், மாணவர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள்  கலந்து கொண்டு பயனடைந்தனர்.