கொரோனா பரவல்: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் வார நாட்களில் இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கின்போது எவற்றுக்கு அனுமதி என்பது குறித்தும் தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் குறித்த விவரங்கள்:

  • அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை
  • ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கில் பொதுப்போக்குவரத்து இயங்காது, மெட்ரோ ரெயில், பஸ் போக்குவரத்துக்கு தடை
  • வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களை முழுமையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
  • அனைத்து கடைகளும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே திறக்கலாம்.
  • தொற்றைக் கட்டுப்படுத்த பேருந்து, புறநகர் ரெயில்களில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி
  • கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள்
  • அனைத்து கல்வி நிலையங்களிலும் ஆன்லைன் மூலம் மட்டும் வகுப்புகள் நடத்த உத்தரவு
  • பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்டுப்பாடு
  • இரவு நேர ஊரடங்கின் போது, மாநிலத்திற்குள் அரசு, தனியார் பேருந்து சேவை தொடரும்
  • பொருட்காட்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிகள் நடத்த தடை
  • பொது பேருந்து, புறநகர் ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி
  • அரசு பணியாளர்கள் ஜன.9க்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி சான்றிதழை அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • அனைத்து திரையரங்குகளும் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி
  • திரையரங்கு, கடைகள், வணிக வளாகங்களில் பணிபுரிவோருக்கு 2 தவணை தடுப்பூசி கட்டாயம்
  • அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல், கலை விழாக்கள் ஒத்திவைப்பு
  • ஞாயிறு அன்று உணவகங்களில் பார்சல் சேவை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி
  • உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி
  • ஞாயிறு, இரவு நேரங்களில் வெளியூர் பயணம் செய்ய பயணச்சீட்டு அவசியம்.
  • அரசியல் கூட்டங்களுக்கு தற்போதுள்ள தடை தொடரும்
  • மருத்துவம் தவிர, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு