யோகா போட்டியை அரசு ஏற்று நடத்த வேண்டும் – யோகா மாணவிகள் கோரிக்கை

தமிழகத்தில் யோகா கலைகளை எளிய மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அரசு யோகா போன்ற கலைகளை எடுத்து நடத்த வேண்டும் என யோகா மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூரில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இரண்டாவது ஆண்டாக நடத்தப்படும் இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஐந்து வகையான யோக நிலைகளை மாணவ மாணவியர்கள் செய்து காட்டி அதில் அந்த யோக நிலைகளை சிறப்பாக செய்யும் மாணவர்கள் அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து யோகா மாணவி வைஷ்ணவி பேசும்போது யோக கலைகளை அனைவரும் கற்றுக் கொள்ளும் பொருட்டு இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. வரும் காலங்களில் மாநில அளவில் இம்மாதிரியான போட்டிகள் அரசு ஏற்று நடத்தும் போது யோக கலைகளும் பாரம்பரியக் கலைகளும் அனைவருக்கும் சென்றடையும். இந்தப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் சிறப்பான முறையில் பயிற்சி பெற்று அதனை செய்தி காட்டி பரிசு பெற்று செல்வதாக தெரிவித்தார்.