வி.எல்.பி ஜானகியம்மாள் கல்லூரியில் இலவசப் பல் மருத்துவ முகாம்

வி.எல்.பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் கோவைப்புதூர் ஜான்ஹவி மருத்துவமனையுடன் இணைந்து இலவசப் பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜான்ஹவி பல் மருத்துவமனை மருத்துவர் விக்னேஷ்வரி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வினை கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். முகாமில் பற்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு குறித்த உரையும் பொது பல் மருத்துவம் குறித்தும் பல் தொடர்பான நோய்கள் பற் சிதைவு குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

உணவு முறைகள் மற்றும் உணவுத் தேர்வுகள் குறித்தும் பல் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த முகாம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.

இருபதிற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் ஏறத்தாழ 80 மாணவர்களும் இந்த முகாமில் பங்கு பெற்று பயன் பெற்றனர்.