ஒமைக்ரானால் பிப்ரவரிக்குள் இந்தியாவில் 3 வது அலை

கொரோனா பெருந்தொற்றின் 3 ஆம் அலை வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவை தாக்கும் என்றும் அதன் தாக்கம் எப்படிப்பட்டதாய் இருக்கும் என்றும் விஞ்ஞானிகளால் கணிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பீதியில் சிக்கித் தவித்த இந்தியா, அதன் கோரப்பிடியில் இருந்து சற்று விலகி இருக்கிறது. அதன் படி, கடந்த 558 நாட்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்து காணப்படுகிறது.

இந்தியாவில் எப்போது இது உச்சத்தை அடையும் என்றும் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தபடுமா என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே குஜராத், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் 21 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மும்பையிலும் மேலும் 2 நபர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஒமைக்ரானால் வரும் பிப்ரவரிக்குள் இந்தியாவில் 3 வது அலை ஏற்படும் என்று ஐஐடி விஞ்ஞானி மனிந்திர அகர்வால் கணித்து உள்ளார்.

இந்நிலையில் ஐஐடி நிறுவன விஞ்ஞானியான மனிந்திரா அகர்வால் கருத்து தெரிவித்தபோது “ஒமிக்ரான் மூலம் கொரோனாவின் 3-வது அலை இந்தியாவில் பிப்ரவரி மாதத்திற்குள் உச்சத்தை அடையும். மேலும் நாட்டில் நாளொன்றுக்கு 1-1.5 லட்சம் வரை நோய் பாதிப்புகள் வரக்கூடும். ஆனால் இது 2-வது அலையை விட மிதமானதாக இருக்கும்.

மேலும், தற்போதைய புதிய மாறுபாடு கொரோனா வைரஸ், அதிக பரவும் தன்மையை கொண்டது போல் தெரிகிறது என்றும், ஆனால் அதன் தீவிரம் டெல்டா மாறுபாட்டில் காணப்படுவது போல் இல்லை

தென்னாப்பிரிக்காவில் அதிகளவிலான மக்கள் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதில் தொற்று பரவுதல் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கை ஆகிய தரவுகள் ஒமிக்ரான் வைரஸ் தொடர்பான தெளிவுள்ள பிம்பத்தை நமக்குத் தரும்” என்று தெரிவித்துள்ளார்.