இரத்தினம் கல்லூரியில் 17–வது பட்டமளிப்பு விழா

இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2016-2017-ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு 17–வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இளங்கலை, முதுகலை என மொத்தம் 20 துறைகளைச் சேர்ந்த 793 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளித்து கௌரவிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளித்தனர்.

பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் இரத்தினவேல் ராஜன் (Country HR Expert. India&Myanmar, Ball Corporation) கலந்து கொண்டு பேசுகையில்: கொரோனா காலகட்டத்தில் சவால்கள் மாணவர்களைத் தயார்படுத்தியது. எவ்வாறு சவால்களை எதிர்கொண்டு முன்னேற வேண்டும் என்று இக்காலக்கட்டம் கற்றுக்கொடுத்தது.

கல்லூரி நாட்களில் கற்ற அனுபங்கள் என்றும் வாழ்வில் பொக்கிஷம். தன்னுடைய பலவீனத்தை அறிந்து கொண்டு, அதனைச் தாண்டிச் செல்ல தன்னை வளர்த்துக் கொள்ளவேண்டும். தோல்விகளை எற்றுக் கொண்டால் வெற்றி இலக்கை அடைய முடியும் எனப் பேசினார்.

சிறப்பு விருந்தினர் இராணி சத்தி ஸ்ரீ (Head;-C&B, Complaince and Digitization, Wipro Infrastructure Engineering) பேசுகையில்: இந்தியாவின் பெருமைகள் அதிக அளவில் உள்ளது என்றும் இந்திய நாடு வளமிக்கது என்றும் கூறினார். மாணவர்கள் தங்கள் வருங்காலத்தில் இந்திய வளர்ச்சிக்குத் துணை நிற்க வேண்டும். புரிதல் இருந்தால் தான் வருங்காலத்தை எதிர்கொள்ள முடியும். வாழ்க்கைக்கு தெளிவு இருக்க வேண்டுமானால் ஓழுக்கம் அவசியம் தேவை. அதனால் தங்கள் போகும் எல்லையை அடையமுடியும் என்று கூறினார்.

மேலும் விழாவில் இரத்தினம் கல்விக் குழுமத் தலைவர் முனைவர் மதன் செந்தில் விழாவினைத் தலைமையேற்று தலைமை உரையாற்றினார். செயலாளர் ஷீமா செந்தில், கல்லூரி முதன்மை நிர்வாக அதிகாரி முனைவ மாணிக்கம் மற்றும் கல்லூரி முதல்வர் முரளிதரன், அறிவியல்த்துறை புல முதன்மையர் சுரேஷ், ஆராய்ச்சித் துறை புல முதன்மையர் சபரிஷ், இரத்தினம் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் நாகராஜ் ஆகியோர்கள் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.