கார்த்தி சிதம்பரம் பிறந்தநாள்: கோவையில் சிறப்பு பூஜைகளுடன் நலத்திட்ட உதவிகள்

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சிறப்பு பூஜைகளுடன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் ஆன கார்த்தி சிதம்பரம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவையில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளரும், கோவை மாவட்ட காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவருமான ஹரிஹரசுதன் தலைமையில் நடைபெற்ற இதில், கோவை ரேஸ் கோர்ஸ் சாரதாம்பாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு சேலை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

தொடர்ந்து கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என். கந்தசாமி, கோவை செல்வன், சரவணகுமார், சோபனா செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.