ஸ்ரீ நாட்டிய நிக்கேதன் 25 ஆம் ஆண்டு விழா: வியப்பில் ஆழ்த்திய பரத நாட்டிய நிகழ்ச்சி

இந்துஸ்தான் கல்லூரியில் ஸ்ரீ நாட்டிய நிக்கேதன் பயிற்சி பள்ளியின் 25ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பரத நாட்டியம் நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் இடம்பெற்ற மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது.

பரத நாட்டியம் என்பது தமிழ்நாட்டிற்குரிய ஒரு மிக சிறந்த நடனமாகும். பல்லாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய இந்த கலையின் கடவுளாக சிவ பெருமான் இருக்கிறார். இன்றும் பரதம் ஆடும் பலர் முதலில் வணங்குவது நடராஜ பெருமானை தான்.

நடன ஆசிரியர் மிருதுளா ராய் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கண்ணன், முருகன், சிவன், சக்தி உள்ளிட்ட கடவுள்கள் பற்றிய நடன நாட்டிய நிகழ்ச்சி இடம்பெற்றன.

150 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு நடனத்தின் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.