கே.ஐ.டி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தொடக்க விழா

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா இணைய வழி மூலமாக புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சசிகாந்த் ஜெயராமன், (Vice President-Global Human Resources, MulticoreWare Inc.) கலந்து கொண்டார். அவர் மாணவர்களிடம் உரையாடிய போது, தனிமனித மதிப்பு, குடும்பத்தின் மதிப்பு, சமுதாயத்தின் மதிப்பு ஆகியவற்றை உணர்ந்து மாணவ மாணவியர்கள் தங்களது படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும்.

வளர்ந்துவரும் டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்களை தாண்டி செயல்திறன் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் வாழ்வில் முன்னேறுவதற்கு கல்வி அறிவோடு தனிப்பட்ட திறமைகளையும் வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் கொள்ள வேண்டும். அதுபோல் தாங்கள் கற்ற கல்வியின் மூலம் புதிய படைப்புகளை உருவாக்குவதில் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும். மேலும் இந்தியாவில் உள்ள இளம் மாணவர்கள் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கவும், தொழில் முனைவோர் புதுமையான தயாரிப்புகளை சிந்திக்கவும் வலியுறுத்தினார். அத்துடன் ஒவ்வொரு துறை சார்ந்த பல்வேறு வேலை வாய்ப்புகள் பற்றியும் அதில் மாணவர்கள் தங்களது திறமைகளை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதை பற்றி க் கூறனார்.

இவ்விழாவில் கல்லூரியின் நிறுவனத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, துணைத் தலைவர் இந்து முருகேசன், முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ்,பல்வேறு துறைத்தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.