ஷாப்பிங் என்றாலே டவுனா?

பொதுவாக பண்டிகை என்றாலே கொண்டாட்டங் களுக்கும், மகிழ்ச்சிக்கும் பஞ்சம் இருக்காது. அதிலும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் வரும் தொடர் விடுமுறை, போனஸ், சொந்த ஊர் திரும்புதல், புதுமண தம்பதிகளின் தலை தீபாவளி, இனிப்பு பலகாரங்கள், புது படங்கள், பட்டாசுகள் போன்றவை ஒரு தொடர்ச்சியான சந்தோஷ மன நிலையை நமக்குள் ஏற்படுத்துபவை.

தீபாவளி பண்டிகைக் காலங்களில் நம்மையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் ஜொலிக்க வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது புத்தாடைகளே. தீபாவளியும், புத்தாடையும் இரண்டற கலந்த ஒன்றே என்றும் கூறலாம். பெரும்பாலான குடும்பங்களில் போனஸ் கிடைத்த உடன் செய்யக்கூடிய செயல் குடும்பத்துடன் ஜவுளிக் கடைக்கு சென்று துணிகள் எடுப்பதாகத் தான் இருக்கும்.

நகரத்தாரோ, கிராமத்தாரோ பண்டிகை சமயங்களில் சிட்டியில் உள்ள முக்கியமான பகுதிக்குச் சென்று பொருட்களோ அல்லது துணிகளோ வாங்குவது தான் வழக்கம். ஏனெனில் அங்குதான் எல்லா வகையான கடைகளும் அணிவகுத்து இருக்கும். அதோடு அனைத்துப் பொருட்களையும் வாங்குவதற்கும் வசதியாக இருக்கும். அதுவும் ஜவுளிக்கடைகள் அதிகமாக இருப்பதால் விருப்பமான கடைகளில் சென்று வாங்கி கொள்ளலாம்.

மேலும், இதுபோன்ற காலங்களில் அனைவரும் நகரத்தின் முக்கியப் பகுதிகளில் கூடுவார்கள். அதோடு நம் கோவை நகரவாசிகளுக்கு கடைவீதிகள் என்பது சற்று அருகாமையில் இருக்கும் பகுதிதான். ஆனால் கோவை நகரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கோ அல்லது வேறு ஏதேனும் நிகழ்வுகளின் போதோ டவுன்ஹால் மற்றும் காந்திபுரம் போன்ற முக்கிய இடங்களுக்கு செல்வார்கள். இவ்வாறு ஒரு இடத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள இடத்திற்குச் செல்லும்போது அது கூடுதல் அலைச்சலாக இருப்பதோடு போக்குவரத்து நெரிசலை சந்திக்க வேண்டி வரும். மேலும் இந்த அலைச்சலுக்கு நடுவே கூட்டநெரிசலையும் கடந்து செல்ல வேண்டும்.

இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்கும் வகையில் அமைதியான இயற்கைச் சூழலில், அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத நிலையில், நம் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் ஜவுளிக்குப் பெயர் பெற்ற ஸ்ரீ கணபதி சில்க்சின் மற்றொரு புதிய பரிமாணமாக ஸ்ரீ கணபதி மார்ட் என்ற ஒரு பிரம்மாண்டமான ஜவுளிக் கடை தொடங்கப்பட்டுள்ளது.

படபடக்க வைக்கும் ஹாரன் சத்தங்களோ, பார்க்கிங் பிரச்சினைகளோ, கூட்ட நெரிசலோ இல்லாத இடத்தில் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் இக்கடை அமைக்கப்பட்டுள்ளது. எங்கு நம் வாகனத்தை நிறுத்துவது என்ற குழப்பம் நீடிக்காத வகையில் விசாலமான கார் பார்க்கிங் வசதியோடு கவலையே

இல்லாமல் நிதானமாக பர்சேஸ் செய்யலாம். மேலும் ஷாப்பிங் செய்யும் போது குழந்தைகளையும் மகிழ்விக்கும் வண்ணம் அவர்களுக்கான பார்க் வசதியும் ஏற்படுத்தியுள்ளனர். ஷாப்பிங்கோடு நின்று விடாமல் பொழுதுபோக்கு அம்சங்கள், சிற்றுண்டி கடைகள், நண்பர்களுடனும், குடும்பத்தாருடனும் கூடிப் பேசி இளைப்பாறவும் என அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் அனுபவிக்கலாம்.

குறிப்பிட்ட ஆடைகள் என்றில்லாமல் பட்டுப் புடவைகள், வண்ண வண்ண சேலை கலெக்சன்ஸ், சிறுவர் சிறுமியருக்கான ஆடைகள், ஆடவர் ஆடைகள் மற்றும் கைத்தறி ஆடைகள் என அனைத்து வகையான ஆடைகளையும் வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் வாங்கிக் கொள்வதோடு விலையும் அதிகமாக இல்லாமல் மார்க்கெட் விலையை விட 20% குறைவாக உள்ளது. நீலாம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிற பகுதி மக்களுக்கு இதனால் நேரமும் பணமும் மிச்சமாவதோடு இயற்கைச் சூழலில் ஒரு ஆரோக்கியமான ஷாப்பிங் அனுபவத்திற்கு வித்திடுகிறது.

காதைக் கிழிக்கும் சரவெடி சத்தமும், கண்ணைப் பறிக்கும் வான வேடிக்கையுடன் நவம்பர் 4ம் தேதி நம் வீட்டு வாசலில் காத்திருக்கும் தீபாவளியை புத்தாடை உடுத்தி வரவேற்க இன்னும் சிறிது நாட்களே உள்ளன.

இன்னும் ஏன் தாமதம்? புதிய அனுபவத்தையும், ஆரவாரத்தையும் பெற இப்போதே ஸ்ரீ கணபதி மார்ட் போய் வாருங்கள்!