மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் கல்வி உதவி தொகை

மார்ட்டின் அறக்கட்டளை சார்பாக ரூபாய் ஒரு கோடி மதிப்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லீமா ரோஸ் மார்ட்டின் வழங்கினார்.

மார்ட்டின் அறக்கட்டளை சார்பாக பல்வேறு சமுதாய நல பணிகள் மேம்பாட்டிற்கென நன்கொடைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள், மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை என ஏராளமான சமுதாய திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகின்றன. இந்நிலையில் ஒரு கோடி ரூபாய் அளவில் ஏழை எளிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகைக்கான காசோலை வழங்கும் விழா கோவை துடியலூர் சி.கே.மகாலில் நடைபெற்றது.

இதில் மார்ட்டின் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லீமா ரோஸ் மார்ட்டின், மாணவ, மாணவிகளுக்கு காசோலை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் நல்ல முறையில் படித்து நாட்டுக்கும், வீட்டிற்கும் நல்ல பெயர் வாங்கி தர வேண்டும் எனவும், எங்களது அறக்கட்டளை சார்பாக கல்வியை ஊக்குவிக்கும் விதமாக இது போன்ற உதவிகள் தொடர்ந்து செய்யப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அரிமா சங்க முன்னாள் ஆளுநர் மனோகரன், முன்னாள் காவல் துறை அதிகாரி ராணி, டாக்டர் கோதனாவள்ளி மற்றும் பார்வதி ரவிச்சந்திரன் உட்பட மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.