ஒய்.டபிள்யு.சி.எ சார்பில் இலவச தடுப்பூசி முகாம்

கோவையில் 6வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று 6ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி சாலை வ.உ.சி மைதானத்திற்கு எதிர்ப்புறம் உள்ள இளம் மகளிர் கிறிஸ்துவ சங்கம் (YWCA) சார்பில் இன்று இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

ஒய்.டபிள்யு.சி.எ- வின் தலைவர் செலினா அகஸ்டின் தலைமையில் நடைபெற்ற இம்முகாமினை நகர உதவி சுகாதார அதிகாரி வசந்த் திவாகர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். மேலும், இலவச கண் பரிசோதனை முகாமும் நடைபெற்று வருகிறது.