அப்துல் கலாம் பிறந்த தினம்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு கலாம் மக்கள் அறக்கட்டளை, நேரு நகர் அரிமா சங்கம், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் F.O.P அறக்கட்டளை ஆகியோர் இணைந்து தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புத்தாடைகள், இலவச மரக்கன்று, முகக் கவசம், கிருமி நாசினி மற்றும் உணவு என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேரு நகர் ஹவுசிங் யூனிட் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் கோவை மாநகராட்சி 34, 35 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புத்தாடைகள், மரக்கன்றுகள், முகக் கவசங்கள், கிருமி நாசினி மற்றும் உணவு என சுமார் 400 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

நேரு நகர் அரிமா சங்கத்தின் தலைவர் அரிமா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இதில் மாவட்டத் தலைவர் அரிமா காளியப்பன் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் தலைவர்கள் சுகுமார், நந்தகுமார், மற்றும் செயலாளர் முகமது செமிக், பொருளாளர் ஹரிஷ் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சுற்றுப்புறச்சூழல் மாவட்ட தலைவர் தனசேகரன், குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் ராஜ்மோகன், வட்டார தலைவர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கோவை ராயல் கிளப் தலைவர் சுரேஷ்குமார், துணைத் தலைவர் சசிக்குமார், நேரு நகர் சாய்குமார், செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி, மோகன்ராஜ், பாலசண்முகம், நவீன், அசோக், ஹரிஷ், பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்