கே.ஐ.டி கல்லூரியில் இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கு

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் வேளாண் பொறியியல் துறையின் சார்பாக நாட்டு மாடுகள் மற்றும் இயற்கை விவசாயம் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் பொங்கலூர் ந. பழனிசாமி தலைமை தாங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகுமார் வெங்கடாசலம் (Founder – Kongu Ghoshla, Kangayam மற்றும் Trustee & Joint Secretary, Palayakottai Cattle Farm & Research centre) கலந்து கொண்டார்.

அவர் கூறுகையில்: நாட்டுப் பாலில் உள்ள புரதச் சத்துகளையும் அதில் உள்ள நோயெதிர்ப்பு தன்மைக்கான அறிவியல் காரணிகளையும் மற்றும் கலப்பின பசு மாடுகளின் பாலில் உள்ள விஷத்தன்மை பற்றியும் தெளிவாக கூறினார்.

கௌரவ விருந்தினராக சோமசுந்தரம் (Leading Natural Farmer, Sugar Cane Specialist, Bhavanisgar )கலந்து கொண்டு பேசுகையில் இயற்கை விவசாயம் ஏற்றம் பெற செய்வதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறினார்.

மேலும் இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் பொங்கலூர் ந. பழனிசாமி கூறுகையில், கலந்துகொண்ட மாணவர்கள் குறைந்து குறைந்தபட்சம் 10 விழுக்காடு மாணவர்களாவது அதிநவீன தொழில்நுட்ப முறைகளை கையாண்டு தொழில் முனைவோராக வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

கல்லூரியின் முதல்வர் மோகன்தாஸ் காந்தி, கல்லூரியின் துணை முதல்வர் ரமேஷ் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.