எல்.ஆர்.டி குழுமம் சார்பில் இலவச தடுப்பூசி முகாம்

கோவை வாகராயம்பாளையத்திலுள்ள பாப்பட்டியில் எல்.ஆர்.டி (LRT) குழுமம் சார்பில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை அன்று நடைபெற்றது. SKEL நிறுவன வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முகாமில் 750 நபர்களுக்கு கோவிஷில்டு தடுப்பூசி செலுத்த எல்.ஆர்.டி குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இத்தடுப்பூசி முகாமின் மூலம் அருகில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள பொது மக்கள் பயனடைந்தனர்.